வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி இரண்டு கைதிகள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
றோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார் என்றால், அதற்கு முன் தமக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரி இந்த கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மரண தண்டனை கைதிகள் சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு மணி நேரத்திற்கு வெளியில் அழைத்து வரப்பட்ட போது இவர்கள் கூரை மீது ஏறியுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.