யாழ் விமான நிலையத்தில் பயணச் சேவைகள் ஆரம்பம் - சென்னை செல்ல விமான கட்டணம் எவ்வளவு தெரியுமா.?
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சென்னையில் இருந்து காலை 10.35 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் நோக்கி பயணிக்கும். மீண்டும் குறித்த விமானம் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 2.10 மணிக்கு சென்னை நோக்கி பயணிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்ல ஒருவழி விமான சேவைக்காக 12,990 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.