வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குடாஓய, அலிவங்குவ என்ற பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தனமல்வில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கவலைக்கிடமாக உள்ள ஏழு பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.