முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும் போது முகத்திரை அணியத் தடையில்லை ஆனால்..??
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் எனவும் வாக்களிப்பு நிலையத்திற்குள் உள்நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் ஸ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.