மட்டக்களப்பினைச் சேர்ந்த இளங்கோவன் மதனன் 118 மூலகங்களைக் கொண்ட ஆவர்த்தன அட்டவணையினை இரண்டு நிமிடம் 41 செக்கன்களில் வரிசைக் கிரமமாக அடுக்கி சாதனை படைத்துள்ளார்.
ஆரம்பத்தில் இச் சாதனையினை இரண்டு நிமிடம் 49 செக்கன்களில் செய்து இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கின்னஸ்ஸில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது அதனை 8 செக்கன்களால் முறியடித்து மதனன் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.