Ads Area

இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை அதிகம் சாப்பிடுங்கள்.

இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை அதிகம் சாப்பிடுங்கள்.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது.பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும், ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். இந்த தருணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்மை பிரச்சனை வராமல் இருக்கும்.பீட்ரூட்டை மிச்சியில் போட்டு அரைத்து அதனை அப்படியே சாப்பிட பிடிக்காது. இதன் உடன் ஆப்பிள், ஆரஞ்சு, இஞ்சி இதில் ஏதாவது ஒன்றை அதனுடன் சேர்ந்து ஜூஸாக எடுத்துக் கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் இதனுடன், வெஜிடேபல்ஸ், கேரட், முள்ளங்கி இதில் எதாவது ஒன்றுடன் சேர்ந்து சாப்பிடலாம்.


பீட் ஜூஸ் தினமும் எடுத்துக் கொள்ளும் போது, சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுகர் அளவை அடிக்கடி செக் செய்துக் கொள்வது நல்லது. பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும்
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe