குழந்தைகளின் வயிற்றில் பூச்சியிருந்தால் அம்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடையங்கள்.
வயிற்றில் பூச்சி என்பது பிள்ளைகளுக்கு பெரும் தலைவலியை தர, அம்மாக்களையும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள் நம் உடலில் நுழைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தின்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது. இந்த புழுக்களை நீங்கள் அவ்வப்போது விரட்டி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நோய்களை தாங்கும் எதிர்ப்பு சக்தி என்பது இல்லாமல் போய்விடும்.
மலவாயில் அரிப்பு ஏற்பட இதனால் இரவில் தூக்கம் கெட்டு தேவையில்லாத களைப்புடன் ஒருவர் காலையில் காணப்படவும் கூடும். குழந்தைகளுக்கு இப்பிரச்சனை பெரிதும் காணப்படுவது வழக்கம். அப்படி என்றால் அவர்கள் வயிற்றில் பூச்சுக்கள் இருக்கிறது என அர்த்தமாகும். வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.
பசி எடுக்காமல் இருப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதாவது புழுக்கள் நம் வயிற்றில் அதிகளவில் பெருகி இருக்க அப்போது சாப்பிடும் சாப்பாடு என்பது செரிமான மண்டலத்தை எட்டாது. இதனால் பசி என்பது அற்று உங்கள் குழந்தையின் உடல் காணக்கூடும். புழுக்கள் உடலில் இருந்தால் பற்களை கொறிப்போம். இதற்கு காரணம் உடலில் தேங்கிய வழியும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் கொண்டு நாம் பற்களை என்ன செய்வதென அறியாது செய்வோம். உங்கள் குழந்தைகள் இரவில் படுக்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம்.