Ads Area

பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் மரணம், மாணவர் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

கண்டி, பிலிமதலாவை பிரதேசத்தை சேர்ந்த ஒஷானி எரங்கிக்கா பிட்டவல என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் பரவுவதன் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த மாணவி பரீட்சைக்காக சென்ற நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு பிலிமதலாவையில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

இதே வேளை நேற்று, 

யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்த போது அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe