ஸ்ரீவித்தியா ,பூந்நகரம் மல்வத்தை 02 அம்பாறை (வயது 49) எனும் விலாசத்தை வதிவிடமாக்கொண்ட தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி பிச்சை எடுத்து வருகின்றார்.
ஒரு கண் முற்றாக பார்வையிழந்த நிலையிலும் மற்றய கண் மங்கள் நிலையில் உள்ளதாக தெரிவிக்கிறார்.அநேகமான நாட்களை தான் தடக்கி விழுந்து எழும்பியே தனது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதாக தெரிவிக்கிறார்.
இவர் கையில் பிறசர் சீனி.தோல் அலர்ஜி மார்பககட்டிக்கான சிகிச்சை என ஐந்தாறு கிளிக் கொப்பிகளும் உள்ளது.தனது பிள்ளைகளுக்கு தன்னை பராபரிக்கும் மனோநிலை இல்லை எனவும் தானும் அவர்களுக்கு பாராமாய் இருக்ககூடாது என்பதற்காகவும் தன்னால் இயன்ற வரை பிச்சை எடுத்து தனது வயிற்றுப் பசியை போக்கிக்கொள்வதாக கூறுகின்றார்.
வாழ்நாளில் சொல்லவொன்னா தியாகங்களை அனுபவித்து தமது பிள்ளைகளை பேணிப்பாதுகாத்து உணவு உறையுள் கொடுத்து சமுதாயத்தில் நற்பிரஜைகளாக நம்மை வளர்த்து விடும் பெற்றோர்களுக்கு நாம் செய்யும் கைமாறு என்ன..?
அவர்களின் இறுதிகாலத்தில் அவர்களை சந்தோசமாக வைத்து பேணாது சுமையாக நினைத்து இவ்வாறு நிர்கதியாக அலையவிடும் சுயநலம் கொண்ட மிருகங்களை என்ன சொல்லி அழைப்பது..? இவர்களுக்கு நாம் கொடுக்கின்ற தண்டனை என்ன..?