முகம் பார்க்காமல் செல்போனில் காதல் செய்த வாலிபர், தனது காதலியை நேரில் சந்தித்த போது அதிர்ச்சி அடைந்து ஊரை கூட்டிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு மிஸ்டு கால் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் ஆண் ஒருவர் பேசியுள்ளார். அப்போது இருவரும் பேச ஆரம்பிக்க, இது தினமும் தொடர்ந்துள்ளது. இதையடுத்து நாட்கள் செல்ல செல்ல இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முகம் தெரியாமல் இருவரும் பழகிய போதும், இருவரும் காதல் வலையில் விழுந்தனர். இருவரும் மாறி மாறி அன்பை பரிமாறி கொள்ள காதல் நெருக்கம் அதிகமானது.
திருணமானவர் என்பதை மறந்து, தனது கணவருக்கு தெரியாமல் அந்த பெண் காதலனை சந்திக்க அவரது ஊருக்கு சென்றுள்ளார். காதலன் அனுப்பிய முகவரியில் சென்று அந்த வீட்டின் கதவை தட்டிய போது, 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வந்து கதவை திறந்து, உங்களுக்கு யார் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது தனது காதலனின் பெயரை அந்த பெண் கூற, அது நான் தான் என அந்த மாணவன் கூற அந்த பெண்ணிற்கு தூக்கி வாரி போட்டுள்ளது.
இதையடுத்து அந்த மாணவன் நீங்க யாரு அக்கா என கேட்க, அதற்கு அந்த பெண், தனது பெயரை கூற அதிர்ச்சியில் அந்த மாணவன் கூச்சல் போட்டுள்ளான். அந்த மாணவன் தான் காதலிக்கும் பெண் ஒரு மாணவி என்ற நினைப்பிலேயே இருந்துள்ளான்.