நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் நல்ல நோக்குடனும் இதய சுத்தியுடனும் நல்ல தீர்மானமே எடுத்தோம் ! என சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் பின்னரே அவர் தனது முகநுால் பக்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதானது,
நாம்..,நல்ல நோக்குடனும்,இதய சுத்தியுடனும், நல்ல தீர்மானமே எடுத்தோம் ! நமது மக்களும் அத் தீர்மானத்தையே ஆதரித்தார்கள் ! ஆனால் அல்லாஹ் வேறொன்றை நாடியிருக்கிறான் அதில் நிச்சயம் நலவு இருக்கும் என நம்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.