தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் யாசகம் (பிச்சை) எடுப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு பிச்சையெடுப்பவர்கள் ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சணம் றியால் தண்டப்பணமும் செலுத்த நேரிடும் என சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய சட்டத்தின் படி பிச்சையெடுப்பதற்கு சிறு குழந்தைகளை பயண்படுத்துவது, உடல் உபாதைகள் போல் நடிப்பது, அங்கவீனமுற்றோர்கள் போல் நடிப்பது, நோய்வாய்பட்டிருப்பதாக பொய் கூறி பிச்சையெடுப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.