சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் ஜனாதிபதி கோத்தபாயவுக்கு வாழ்த்துத் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவ் வாழ்த்துச் செய்தியில்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவராக பதவியேற்ற உங்களுக்கு எனது உண்மையான வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவின் ஆலோசனைக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியதுடன், ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு உதவுவதற்காக சவூதி அதிகாரி ரூ .900 மில்லியன் நன்கொடையையும் வழங்கியதும் குறிப்பிடத் தக்கதாகும்.
அதே போல் கடந்த செப்டம்பரில், சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவ 187.5 மில்லியன் சவுதி ரியால் (சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்) களையும் சவுதி அரேபியா வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் http://colombotimes.net
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.