தகவல் - சம்மாந்துறை அன்சார்.
வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவிற்கே அதிக அளவிலான வீட்டுப் பணிப் பெண்கள் மற்றும் வீட்டுச் சாரதிகள் தொழில் நிமிர்த்தம் வந்த வண்ணமுள்ளனர். இலங்கை-இந்தியா-பங்களாதேஷ்-இந்தோனேசியா-பிலின்பைன்ஸ்-எத்தியோப்பியா போன்ற பல நாடுகளிலிருந்தும் சவுதி அரேபியாவுக்கு கத்தாமா-ஹவுஸ் மெயிட் என்ற பெயரில் தொழிலுக்கான வருகின்றனர்.
இவ்வாறு தொழில் நிமிர்த்தம் சவுதி அரேபியாவுக்கு வரும் ஹவுஸ் மெயிட் மற்றும் ஹவுஸ் ரைவர்களில் பலர் ஊதியம் இன்மை, அதிக வேலை, ஓய்வின்மை, உணவின்மை மற்றும் பாலியல் தொல்லை என பல இன்னல்களை சந்திக்கும் கொடுமைகளும் நிகழ்வதுண்டு.
இது தொடர்பாக சவுதி அரேபிய மனித உரிமைக் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தியில், சவுதி அரேபியாவில் வேலை செய்யும் பணிப் பெண்கள் மற்றும் வீட்டுச் சாரதிகள் விடையத்தில் அவர்களின் எஜமானர்கள் கண்ணியம் காக்க வேண்டும், அவர்களுக்கு எந்த வித வேலை அச்சறுத்தல்களோ, கொடுமைகளோ விளைவிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் சாரதிகளது உரிமை-சுதந்திரங்களை பறிப்போர் விடையத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தொழிலாளர் அமைச்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.