இலங்கையில் உள்ள நாய்களின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சம் என்று அண்மையில் இடம்பெற்ற ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் விசர் நாய்க்கடி தடுப்பு செயற்திட்டம் ஒன்றில் உரையாற்றிய பொது சுகாதார மற்றும் மிருக வைத்திய சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எல்.டி.கித்சிறி நாய்களின் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், வருடாந்தம் சுமார் 61 ஆயிரம் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
2019 இல் இந்த நடவடிக்கைகளுக்காக செலவான தொகை 10 கோடி ரூபாய் என்றும் கூறினார்.
கடந்த வருடம் நாய் கடிக்காக 2 இலட்சத்து 9 ஆயிரம் பேர் சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும், அதற்கான செலவு 32 கோடி ரூபாய் என்றும் கூறிய டாக்டர். கித்சிறி , நாட்டில் வருடாந்தம் 26 பேரில் ஒருவர் விசர் நாய்கடியினால் மரணமடைகிறார் என்றும் குறிப்பிட்டார்.
நாய்களின் தொகை மேல் மாகாணத்திலே மிகவும் உயர்வாகவும், கிழக்கு மாகாணத்திலே மிகவும் குறைவாகவும் இருப்பதாக அவர் கூறினார்.