புதிய அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் இன்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலை திட்டமிட்டு சந்திக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் சிறுபான்மையின் மக்களின் பேரம்பேசும் சக்தி அதிகரிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. என திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம். மன்சூர் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் பலமான எதிர்க்கட்சி அவசியமாகும். சிறுபான்மையின சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து இந்த சமூதாயங்களை காக்கின்ற பலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களில் மாத்திரம் தங்கியுள்ளது.
தெற்கில் சிங்கள பேரினவாதம் தலைவிரித்தாடி வருகின்றது. பௌத்த சிங்கள பேரினவாத பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் ஒரே நாடு ஒரேசட்டம் என்ற கோசத்தோடு இன்று சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பல்வேறு சதிகள் தீட்டப்பட்டுக் கொண்டிருன்றனர்.
அதற்கு பின்னர் பல்வேறு வடிவங்களில் விஸ்வரூபம் எடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான சூழ்ச்சிகள், நெருக்கடி தொடர்பாக எல்லோரும் அக்கரையோடு பார்க்க வேண்டும்.
இன்று எங்களுக்குள்ள சவால் எமக்கு எதிரானவர்கள் அல்ல. எமது சமூகங்களுக்குள்ளே ஒழிந்து கொண்டு தங்களுடைய சுயநலனை அடிப்படையாக வைத்து சமூகத்துக்கு எதுநடந்தாலும் பரவாயில்லை எனக் காட்டிக்கொடுக்கின்ற கோடாரிகம்புகளை சமூதாயத்துக்கு எதிரான சக்திகளாக பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, எங்களுக்கு உரித்தான இருப்பு, கலாசாரம், மதம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வதற்கும், எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் போராட முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. அதற்கு எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு அதற்கான ஆணையினை வழங்க வேண்டும். என்றார்.
இந்நிகழ்வில், இந்நிகழ்வில் கலாபூசணம் மௌலவி ஏ.சி,ஏ.எம். புஹாரி (சமயப்பணி- வரலாற்றில் ஓர் ஏடு), கலாபூசணம் ஏ.சி. இஸ்மாயில்(கலைத்துறை), சுபைதா அமீர்(எழுத்துத்துறை), ஐ.எம்.இப்றாஹீம்(வரலாற்றுத்துறை), அலி எம். இஸ்மாயில்(கிராமியக்கலை), எஸ். கோணேச மூர்த்தி(சிற்பம்), யூனிஸ் கே. றஹ்மான்(ஊடகத்துறை) ஏ.ஆர்.எம்.றஸீன் (திறைப்பட இயக்கம்) ஆகிய 08 கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், போட்டி நிகழ்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளினல் வழங்கி வைக்கப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர்களான வீ.ஜெகதீசன், ஏ.எம். அப்துல் லத்தீப், தென்கிழக்குபல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், சம்மாந்துறை கலாசார அதிகார சபையின் பிரதித் தலைவர் வைத்தியர் எம்.எம்.நௌஷாத் ஆகியோர் கௌரவ, விசேட அதிதிகளாகவும் மற்றும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.