கோழைத்தனமான தாக்குதல் மூலம் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - கல்முனை மாநகர சபையில் உறுப்பினர் எம்.ஐ .எம்.அப்துல் மனாப் கண்டனம்.
(எஸ்.அஷ்ரப்கான்)
கோழைத்தனமான தாக்குதல்கள் மூலம் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு கல்முனை மாநகர சபையில் உறுப்பினர் எம்.ஐ. எம்.அப்துல் மனாப் கண்டனம் தெரிவித்தார்.
அண்மையில் எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதீயுத்தின் பயணித்த வாகனத் தொடரணி மீது புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.இத் தாக்குதல் மூலம் அவரின் குரலையோ வளர்ச்சியையோ யாரும் அடக்க முடியாது என்ற செய்தியை இச் சபையில் தெரிவிக்கின்றேன்.
எமது கட்சி அண்மைக்காலமாக முழு இலங்கையிலும் பாரிய வளர்ச்சிகண்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கிலே பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு காரணம் எமது தலைவர் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் சிறப்பான வழி நடாத்தலில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு முன்னோக்கி வருவதாகும்.
மேலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது எமது பகுதியில் மழை பெய்து வருகின்றது. வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால். வீதியில் பிரயாணம் மேற்கொள்ளும் சாரதிகள் விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் கல்முனை பகுதியில் வடிகான்களை துப்பரவு செய்யப்பட வேண்டியுள்ளது. என்றும் தெரிவித்தார்.