ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.டி.ஹசனலியோடு ஒரு நேர்காணல்.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் தீர்மானம் பிழையானது என கருதுகிறீர்களா?
பதில்:- யாரை ஆதரிப்பதாக இருந்தாலும் நிபந்தனை இல்லாமல் ஆதரிக்க முடியாது. நாங்கள் சிறுபான்மைச் சமூகம். நிபந்தனை இல்லாமல் ஆதரிக்கச் சொன்னவர்களும் நிபந்தனை வைக்கும் அளவிற்கு முஸ்லிம்களுக்கு பிரச்சினை இல்லையென்று சொன்னார்கள். அவ்வாறாயின் இவ்வளவு காலத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக எவ்வித தேவையுமில்லை என்ற கருத்துக்கள்தான் வெளிப் படுகின்றது. இது பிழையானது நான் செயலாளராக இருந்தவேளையில் நாம் எத்தனை ஒப்பந்தங்களை செய்திருக்கின்றோம். பிரேமதாசவின் ஆட்சியில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் எதிர்க்கட்சியில் இருந்தார். அக் காலத்திலேயே தலைவர் நிபந்தனைகளை விதித்திருந்தார். ரவூப் ஹக்கீம் அவ்வாறல்ல. நிபந்தனைகளற்று சிறுபான்மை சமூகம் அவ்வாறு போக முடியாது.
பதில்:- அவ்வாறு எதுவும்' இடம்பெறாது என எங்களிடத்தில் கூறியுள்ளார். அதனை நாங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எங்களால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு புதிய ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை இனத்தவர்கள் அதிகமாக காணப்படுகின்றார்கள். அன்று தலைவர் அஷ்ரப் வகுத்த வியூகங்களை அழித்து விட்டார்கள்.
கேள்வி:- தமிழ்-, முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் இணைந்து செயற்பட விரும்பினால் அதற்கான களநிலவரம் எப்படி அமையும்?
கேள்வி:- முஸ்லிம் காங்கிரஸ் அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்தால் அது எவ்வாறு அமையும் அல்லது இது தொடர்பாக உங்களது நிலைப்பாடு எவ்வாறாக அமையும்?
பதில்:- தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் எதிர்க்கட்சி அரசியலில் இருந்து கொண்டு ஒரு சமூகத்தினுடைய விடயங்களை அந்த அரசாங்கத்தில் சாதிக்கலாம் என்று காட்டினார். எதிர்க்கட்சியில் இருந்தால் தான் உரிமை அரசியல், யாப்புரீதியான பாதுகாப்பு பற்றி பேசமுடியும். அரசாங்கத்திலிருந்து எடுக்க முடியாது. அன்று கூட தலைவர் அஷ்ரப்க்கு ஜனாதிபதி கூட மரியாதை அளிக்கும் சிறுபான்மையினத் தலைவராக காணப்பட்டார். தற்போது அவற்றை காணமுடியவில்லை.
கேள்வி:- ஐக்கிய சமாதான கூட்டமைப்பு 13 அம்சங்களடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் ஆதரவளித்தது. இக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது சம்பந்தமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்:- எல்லா தொழிவாய்ப்புக்களும் தகுதியடிப்படையின் கீழ் செயற்படுத்த வேண்டும். இன மத வேறுபாடின்றி உயர் புள்ளி பெற்ற 25 வீதமானோரை செய்தால் மிகுதி 75 வீதம் மாவட்ட ரீதியாக இன ரீதியாக வழங்கப்படலாம். இவ்வாறு செயற்பட்டால் நாட்டில் சிக்கல் ஏற்படாது.
பதில்:- நிறைவேற்றப்படும்
கேள்வி:- சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படும் என்று உத்தரவாதம் மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டும். ஏன் அங்கு குறைவாக வாக்களித்துள்ளனர்?
பதில்:- முஸ்லிம், தமிழ் மக்கள் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள், தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் அது பிழை. சாய்ந்தமருதில் வாக்களித்துள்ளார்கள். ஆனால் குறைவான வாக்களிப்பு இருந்திருக்கும். சில சமயம் நிர்ப்பந்தம் இருக்கும். சாய்ந்தமருது மக்களிடம் மஹிந்த வாக்குறுதி வழங்கிவிட்டு சென்றிருக்கின்றார்.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? பொதுஜன பெரமுன உடன் இணைந்து செயற்படுவீர்களா?
பதில்:- இது வரையில் என்னிடம் எந்த யோசனையும் இல்லை. கட்சிகள் ஒன்று சேர்ந்து வியூகங்கள் அமைக்கப்படும். பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கின்றது. அல்லது அதற்கு முன் நடைபெற்றத்திற்குரிய முஸ்தீபுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எங்களுடைய கட்சியில் கூட இரு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
கேள்வி:- கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக குரல் கொடுத்து மைத்திரிக்கு ஆதரவாக செயற்பட்டீர்கள். ஏன் இத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குகீறீர்கள்?
கேள்வி:- ரவூப் ஹக்கீமுக்கு எதிராக செயற்படுவதற்காகவே பொதுஜன பெரமுனவை ஆதரிக்கத் தீர்மானித்ததாக கூறப்படுவது இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லை என்பதை தொடர்ச்சியாக ரவூப் ஹக்கீம் நிரூபித்து வருகின்றார். கிழக்கு முஸ்லிம்களின் தலைமைத்துவம் இங்கு தான் இருக்க வேண்டும். அதற்காக கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் இதனை ஒரு பிரதேச வாதமாகப் பார்க்கக் கூடாது. ஏன்ெனன்றால் அவர்களுக்கு 20 வருடமாக தலைமைத்துவத்தை வழங்கி இருக்கின்றோம். இதற்காக அவர் எங்களை பெரும்தன்மையுடன் பார்க்க வேண்டும். தலைவர் மட்டும் தான் பாராளுமன்ற அமைச்சராக இருக்கவேண்டுமென்ற சம்பிரதாயம் இருக்கு. ஏன் தலைமைத்துவத்தை எம் மாவட்டத்திற்கு வழங்க முடியாது. 20 வருடங்களாக அவர்களிடத்தில் இருந்தது.
கேள்வி:- முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
பதில்:- 20 வருட காலமாக முஸ்லிம்களின் அரசியல் பயணம் ஒரு இருண்டதாகவே, காணப்படுகின்றது. ஒன்றுமில்லாத சமூகமாக முஸ்லிம் சமூகம் தற்போது மாறியுள்ளது. இதனை கேட்பதற்கு யாரும் இல்லாத நிலமை உருவாகியுள்ளது. இதனை மாற்றியமைப்பதற்கு எமது பிரதேசத்தைச் சேர்ந்த தலைமைத்துவம் எமக்கு வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் அரசியலை எதிர்காலத்தில் சமூகமயப்படுத்தியதாக கொண்டு செல்ல முடியும்.
கேள்வி:- எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்:- பெரும்பான்மை சமூகத்துடன் பேசி எமது கோரிக்கைகளை அங்கீகரிக்கக் கூடிய தலைமைத்துவங்களை கண்டு அவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு அஷ்ரபின் கொள்கையை கொண்டு செல்வதுதான் எனது பணி. என்னால் தொடங்கப்பட்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியில் கூட மர்ஹும் அஷ்ரபினால் எழுதப்பட்ட யாப்பையே வைத்திருக்கின்றேன். மர்ஹும் அஷ்ரபிற்குப் பிறகு முஸ்லிம்களுக்கென்று ஒரு சரியான தலைமைத்துவம் இல்லை. அத் தலைமைத்துவம் கிழக்கிலிருந்துதான் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
கேள்வி:- இறுதியாக என்ன கூற விரும்புகின்றீர்கள்
பதில்:- முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று தம்பட்டம் அடித்து கொள்கின்ற தரப்பினர் முடிந்தால் பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து அரசியல் செய்து காட்ட வேண்டும், அதுவே முஸ்லிம் மக்களின் பெருவிருப்பமாக உள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் பெருந்தலைவர் அஷ்ரப் பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து இருந்துதான் முதன்முதல் அரசியல் செய்தார். எதிர்ப்பு அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவரின் அக்கால பகுதி அமைந்து நின்றது. அக்கால பகுதியில் அவர் 118 நிமிடங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். அமைச்சராக அவர் பதவி வகித்த காலங்களில் மொத்தமாக 05 மணித்தியாலங்கள் வரைதான் பாராளுமன்றத்தில் பேசினார் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. அவர் பாராளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து இருந்து அரசியல் செய்த காலத்தில் பெற்று கொடுத்த நன்மைகள் என்றென்றைக்குமே மகத்தானவை.
அவற்றில் குறிப்பிட்டு சொல்ல தக்க ஒன்றுதான் விகிதாசார தேர்தலில் வெட்டு புள்ளியாக இருந்து வந்த 121/2 வீதத்தை 05 சதவீதமாக குறைத்தார். அதன் நன்மைகளைதான் ஜே.வி.பி அடங்கலாக சிறுபான்மை கட்சிகள் இன்றும் அனுபவிக்க முடிகின்றது.
நேர்காணல்:- எம்.எஸ்.எம். ஹனீபா