அஹமட் சாஜித் -
மாவடிப்பள்ளியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வியாபாரத்தினை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய, மீனவர்களுக்கான துவிச்சக்கர வண்டி, மீன் விற்பனைக்குத் தேவையான ஏனைய பொருட்களை இலவசமாக வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழு, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் ஆகியோர் மேற் கொண்டிருந்தனர்.
இதற்கமைய மாவடிப்பள்ளியில் உள்ள 23 மீனவர்களுக்கு தலா 25,000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களை வழங்க நிதியொதுக்கப்பட்டிருந்தது இதன் முதற்கட்டமாக இன்று (10) செவ்வாய்க்கிழமை 12 மீனவர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.