Ads Area

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படமாட்டாது!

நாடாளுமன்றக் கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். அவர், ‘

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


அதற்கு எழுத்துபூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளித்துள்ளார். அதில், ‘இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி, பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6-ன் படி இயல்புரிமை( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமகக் குடியேறியவர்கள் என மறைமுகமாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe