Ads Area

நாவிதன்வெளி சமூர்த்தி வங்கி கூரையில் ஒழுக்கு.

பாறுக் ஷிஹான்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமூர்த்தி வங்கி அடைமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான மக்கள் வந்து போகும் இவ்வங்கியில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வங்கியின் உட்பகுதியில் நீர் தேங்கி காணப்படுகின்றது.

அத்துடன் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மழைநீருக்கு மத்தியில் பணிபுரிவதுடன் வங்கிக்கு வரும் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் ஏழை மக்களின் சேமிப்பு புத்தக அலுமாரிகள் களஞ்சிய பகுதிகளில் மழை நீர் உட்புகும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.  அடிப்படை வசதியற்ற நிலையில் அதன் கூரை சேதடைந்து  காணப்படுவதாக பிரதேச பொது அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் பௌதீக வளகுறைபாடுகளுடன்  சேதடைந்தும்  சுற்றுமதில் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இவ்வங்கி  இயங்கிவருகின்றது.

உரிய அதிகாரிகள்   இவ்விடயத்தில் துரித கவனம் செலுத்தி குறித்த  பிரதேசத்தில் உள்ள வங்கியை   புனரமைத்து அடிப்படை வசதிகளை நிபர்த்தி செய்து தருமாறு பிரதேச அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe