(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச சபையினால் நடாத்தப்படும் பாலர் பாடசாலைகளின் வருடாந்த விடுகை விழாவும், வரவேற்பு விழாவும் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அப்துல் மஜீட் மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.அச்சி முஹம்மட், ஆர்.கோவிந்தசாமி, ஏ.சீ.எம்.சஹீல், ஏ.எம்.எம்.றியாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி, எம்.எஸ்.சரீபா, எஸ்.எம்.எஸ்.நிலுவ்பா, கே.எம்.இன்பவதி, மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்லியா, பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது எம்.பி.சீ.எஸ், பாத்திமா, பிஸ்மில்லாஹ் ஆகிய மூன்று பாலர் பாடசாலை மாணவர்களின் கலை கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகளும், இடம்பெற்றதுடன், பிரதேச சபையினால் விடுகை மாணவர்கள் மற்றும் புதிதாக இணைந்த மாணவர்களுக்கு இலவசமாக புத்தக பையும் வழங்கப்பட்டது.