மட்டக்களப்பு வைத்தியசாலை உயிர் பலி இடமா..?? அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!
மட்டுபோதனா வைத்திய சாலையில் பிரவசத்திற்காக கடந்த 20/12/2019 அன்று மாலை பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து தாயொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு ஊசி போடப்பட்ட பின் வலி அதிகம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த பெண் அங்கு இருந்த தாதியிடம் சென்று தனக்கு பிரவச வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அங்கும் சில மணித்தியாலங்கள் போராட்டத்தின் மத்தியில் நள்ளிரவு 1:35 am ஆண் குழந்தை பிறந்துள்ளது . அதன் பின் அக்குழந்தைக்கு சுவாசிப்பதில் கடினமாக உள்ளதாகவும் 1மணித்தியலம் கண்ணாடி பெட்டியில் வைத்தால் சரியாகிவிடும் என கூறிய தாதியர்கள் குழந்தையை வெளியே எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் தனது குழந்தை அழுததாகவும் சிறுநீர் கழித்ததாகவும் அத் தாய் கூறுகின்றார். அத்துடன் பிள்ளையின் நிறையும் 2kg 35g இருந்துள்ளது. இவ்வாறான நிலையில் குழந்தை இறந்ததுக்கான காரணத்தை வினவிய போது பல தரபட்ட காரணங்கள் அங்குள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட காரணத்தை கேட்க ஆச்சரியமாய் இருந்தது. அதாவது குழந்தைக்கு நுரையீரல் இல்லயாம். அப்படியானால்....
அந்த குழந்தை 8மாதத்தில் பிறந்தது எப்படி ? இவ்வளவு தேக ஆரோக்கியமாக பிறந்திருக்கும் ? பலகேள்விகளுக்கு பதில் இல்லை.
எத்தனை குழந்தைகள் இந்த வைத்தியசாலையில் இறந்து இருக்கிறார்கள்? இதற்கு தீர்வுதான் என்ன? என மட்டக்களப்பு மக்களப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இப்படி அடிக்கடி குழந்தை இறப்பு வீதம் அதிகரிக்குமாயின் வரும் தமது சந்ததிகளின் நிலமைதான் என்ன? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தாதியர்களின் அசமந்தப்போக்கால் இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாகுமோ? நமது இந்த அவலநிலைக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது மட்டக்களப்பு வைத்தியசாலை உயிர்பலி இடமா எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிரசவத்தின் போது குழந்தை இறப்பு https://jaffnazone.com
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரும் அவலம்! https://www.tamilwin.com/community/01/149110
(செய்தி மூலம் - https://www.jvpnews.com