Ads Area

சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏன் ஆபத்தானது????

தகவல் - Ihshan J.M.I Mohamed 

கிரகணம் என்பது சுற்றுப்பாதையின் நேர்கோட்டில் (Obit) சூரியன், சந்திரன், மற்றும் புவி நிலைபெருவதாகும்... இது இருவகைப்படும் 

1- சூரியக் கிரகணம் 
2- சந்திரக் கிரகணம்

சூரியக்_கிரகணம் - Solar Eclipse

இது சூரியன், சந்திரன் தொடர்ந்து புவி என்ற வரிசை ஒழுங்கில் அமைவதாகும். இது பொதுவாக பகல்வேலையில் நிகழ்வதாக. இதன்போது சூரிய ஒளியினை சந்திரன் இடைமறித்து குறித்த நேரகலப்பகுதியில் புவியின் ஏதோவொரு புள்ளியில் இருள் சூழ (சூரியக் கிரகணம் தோன்ற) ஆரம்பிக்கும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக (Ring of fire) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இன்று டிசம்பர் 26 நடைபெற உள்ளது வளைய சூரிய கிரகணம்.

சந்திரக்_கிரகணம் Moon Eclipse

மேலே சூரியக் கிரகணம் போன்றே சூரியன், புவி தொடர்ந்து சந்திரன் என்ற நிலைப்பாடு ஏற்படுவதாகும்.இது குறிப்பாக இரவு வேளையில் நிகழும்...

கிரகணத்தின்_ஆபத்துக்கள்.

பொதுவாக கோள்கள் யாவும் தங்களின் ஈர்ப்பு புலங்களை அடிப்படையாகக்கொண்டு தங்கள் நகர்வையும், இருப்பிடத்தையும் தக்கவைத்துக்கொள்ளகின்றன. அந்த வகையில் ஈர்ப்புவிசை ரீதியாக பூமியின் மீது அதிக தாக்கத்தை சூராயனும், அதைவிட குறைவான செல்வாக்கை சந்திரனும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டிருக்கும். சூரிய கிரகணமே கிரகண பொழுதுகளில் பூமியில் அதிக தாக்கத்தை உண்டாக்கும். காரணம் குறித்த நேர்கோட்டில் இம்மூன்றும் தொடர்ந்து வருவதனால் சூரியன், சந்திரன் இரண்டினதும் ஈர்ப்பு விசை புவியின் மீது மிகையான தாக்கம் செலுத்த ஆரம்பிக்கும். இதனால் புவியில் ஏற்படும் மிகையான ஈர்ப்புவிசை காரணமாக சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவது சாத்தியாமக்கும்...

இன்று (26-12-2019) உலகில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது இதனால் பல ஆபத்துகள் ஏற்படும் என பல தகவல்கள் பரப்படுகின்றன. சூரிய கிரகணங்கள் ஏற்படும் போது இயற்கை அனர்தங்கள ஏற்படும் என மக்கள் நம்புகின்றனர். பல போது அப்படி நடந்தும் உள்ளது.

உதாரணமாக 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சூரிய கிரகணத்துடன் சூறாவளி ஏர்மா (Irma) பயங்கர சூறாவளியாக மாறியது, ஒரு கடல் பகுதியின் முழு நீரையும் வேறு இடத்திற்கு நகர்த்தியது. அதே காலப்பகுதியில் மெக்சிகோவில் பாரிய பூமி அதிர்வை ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்தியது. இவை அண்மைக்கால உதாரணங்கள் வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன.

இன்று கிரகணம் ஏற்படவுள்ள நிலையில் ஒரு சாதாரள சூறாவளியாக மாறும் என எதிர்பார்கப்பட்ட சூறாவளி Category 3 சூறாவளியாக மாறி தற்போது பிலிப்பினை தாக்குகிறது, இது காலநிலை மாற்றத்தின் விளைவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் உரிய சான்றுகள் இல்லாத பரசோதனை மூலம் நீரூபிக்க முடியாத விடயங்ளை ஏற்பதில்லை. விஞ்ஞானம் ஏற்பதில்லை என்பதற்காக ஒரு விடயம் பொய்யாவதும் இல்லை, உண்மையாவதும் இல்லை. பல சமயங்கள் கிரகணம் நடக்கும் போது இறைவனிடம் பாதுகாப்பு தேடுமாறு பணிக்கிறது.

இஸ்லாம் கிரகணம் முடியும் வரை பள்ளியில் தொழுமாறு பணிக்கிறது. அதே போல் மக்களிற்கு சதகா (நன்கொடைகள் )செய்யுமாறு பணிக்கிறது (ஏனைய சமயங்கள் என்ன சொல்கிறது என்பதை comment பண்னினால் நன்று) கிரகணத்தின் போது நச்சு கதிர்கள் உலகை அடையும் என்பது அடிப்படை அற்றது. எப்போதும் கிரகணம் இல்லாத போது கூட சூரியனை நேரடியாக பார்ப்பதால் கண் பாதிப்படையும். எனவே கிரகணத்தை எந்தக் காரணம் கொண்டும் வெற்றுக் கண்னால் பார்க்க வேண்டாம்.

சிறுவர்கள் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் சூரியனை நேரடியாக நோக்க வாய்புள்ளதாலும், விலங்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தினால் அச்சப்பட வாய்புள்ளதாலும் அவர்களை வெளியில் அனுப்பாமல் இருப்பதில் பிரச்சினை இல்லை. நாளை வழமை போன்று தொழில் செய்ய வேண்டும், இயல்பாக எல்லா விடயங்களும் நடக்க வேண்டும்.

நாளை இலங்கையின் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் அனேகமாக தெளிவாக அவதானிக்கலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் பகுதியளவில் அவதானிக்கலாம். சமய நம்பிக்களை மதிப்போம், நவீன விஞ்ஞானத்தின் வழிகாடல்களையும் ஏற்று நடப்பது நல்லது. தேவையற்ற அச்சங்களை தவிர்ப்போம்.


"எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்" (புகாரி 1040)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe