Ads Area

ஐ.நா. சபையில் உயர் பதவி பெற்றார் கல்முனை ஏ.எல்.ஏ.அஸீஸ் அவர்கள்.

Kamal Hussain

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. வின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட்டு வந்த கல்முனையைச் சேர்ந்த ஏ.எல்.ஏ. அஸீஸ் ஐ.நா. வின் 2020 இற்கான அரச தரப்பினர்களின் கூட்டங்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏலவே இப்பதவியை வகித்த வெளிச்செல்லும் முன்னாள் தலைவரான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் யன் ஹ்வாங் அவர்களிடம் இருந்தே ஏ.எல்.ஏ. அஸீஸ் இப்பதவியை பொறுப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பதவி ஏற்பின் ஊடாக 2020 இற்கான ஐ.நா. சபையின் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக ஏ.எல்.ஏ. அஸீஸ் செயற்படுவார். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் இலங்கை சார்பான நிரந்தர பிரநிதியாகவும் ஏ.எல்.ஏ.அஸீஸ் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe