சர்ஜீன் லாபீர்
ஊவா மாகாணத்தின் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் கடும்காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காயங்களுக்கு உள்ளானார்கள் கல்முனை,சாய்ந்தமருது பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.