சகா.
கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிப்பு அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்.
கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக கல்முனைப் பிராந்திய தொற்றுநோய் பிரிவு பொறுப்பதிகாரி நாகூர் ஆரிப் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை தெய்வாதீனமாக யாரும் உயிரிழக்கவில்லை. மழைக்கு பின்னரான காலத்தில் டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதைவிட காசநோய் தாக்கமும், தொழுநோய் தாக்கமும் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.