காரைதீவு சகா
அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை ; காய்ச்சலால் பீடிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தணிந்திருந்த அடைமழை மீண்டும் காலை முதல் ஆரம்பித்துள்ளது. அதனால் மீண்டும் தாழிநிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீதிகளிலும் வெள்ளம் தேங்கிநிற்கிறது.
இதேவேளை, கல்முனைப் பிராந்தியத்தில் இத்தொடர்மழை காரணமாக, ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.