டுபாயில் வண்டி ஓட்டும் அனைவருக்குமான விழிப்புணர்வுப் பதிவு.
டுபாய் நாட்டைப் பொறுத்தவரை அங்கு உள்ள பெரும்பாலான வீதிகள் மிகவும் விசாலமானவைகளாகும் அவ்வாறான வீதிகளில் 4 க்கு மேற்பட்ட வரிசைகள் (lane) இருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் ஒவ்வொரு விதமான வேகக் கட்டுப்பாடுகள் இருக்கும் இவ்வாறான வீதிகளில் சிலர் மிக வேகமாகச் செல்லக் கூடிய லேனினல் மிக மெதுவாகவும், மிக மெதுவாக செல்லக் கூடிய லேனில் மிக வேகமாக செல்வதுமுண்டு இது முற்றிலும் தவறானதும், ஆபத்தானதும், அபராதம் விதிக்கப்படுவதுமானதுமாகும்.
மிக வேகமாக செல்லக் கூடிய லேனில் (Fast Lane) மெதுவாகச் சென்று பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 400 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும் மேலும் இவ்வாறு வண்டி ஓட்டுபவர்கள் ராடார் மூலம் கண்கானிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என டுபாய் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.