தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பின் முஸ்லிம் அரசியல் வியாபார அரசியலாகி விட்டது.
பெருந்தலைவர் அஷ்ரப்பின் மரணத்துக்கு பின்னர் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் தேசிய கோட்பாட்டில் இருந்து விலகி அவர்களுக்கு என்று சாம்ராஜ்ய வட்டங்களை உருவாக்க தொடங்கி முஸ்லிம் அரசியலை வியாபார அரசியலாக மாற்றினர் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹஸன் அலி தெரிவித்தார்.
இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போதே ஹசன் அலி இவ்வாறு கூறினார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பினராகிய நாம் இரண்டு வருட பயணத்தின் பின் சம்மாந்துறை மண்ணில் ஒரு கிராம மட்ட மத்திய குழுவை நிறுவுவதற்கு போதுமான அளவு இன்று வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதை இட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வு எனது ஆரம்ப கால முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைக்கான கட்சி நடவடிக்கைகளை மீட்டு பார்க்க செய்கிறது.
1987 ஆம் ஆண்டு நடைபெற்ற எல்லை நிர்ணயத்தில் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களின் எல்லைகள் பறிக்கப்பட்டன. அவ்வாறான ஒரு நிலைமைதான் சென்ற நல்லாட்சியிலும் நேர்ந்தது.