(எம்.எம்.ஜபீர்)
அழகான நாட்டை உருவாக்கும் நோக்கில் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் ஜனாதிபதியின் வழிகாட்டல் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் மரநடுகை வேலைத்திட்டம் நேற்று நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சம்மாந்துறை பிரதேசத்தில் பசுமையான சூழலை ஏற்படுத்தும் வகையில் முஅல்லா மஹல்லா மையவாடி பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.