சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்கள் முறையான கழிவகற்றல் மேற்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நெளஷாட் அவர்களின் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.ஏ.றஸாக், சம்மாந்துறை பிரதேச சபையின் வருமான பரிசோதகர் ஏ.எம்.அமீன், இறைச்சிக்கடை கோழிக்கடை உரிமையாளர்கள், ஆட்டு இறைச்சிக் கடை உரிமையாளர்கள், ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.