சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலய மாணவர்கள் சம்மாந்துறை பிரதேச சபைக்கு இன்று விஜயம் மேற்கொண்டனர்.
05ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் வருகைதந்து சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நெளஷாட் அவர்களை சந்தித்து சினேகபூர்மாக உரையாடியதுடன் சபா மண்டபம், தவிசாளர் அலுவலகம் மற்றும் அலுவலக நடவடிக்கை போன்றவற்றையும் பார்வையிட்டனர்.
இதன்போது வருகைதந்த மாணவர்களுக்கு தவிசாளரினால் இனிப்புப்பண்டமும் வழங்கப்பட்டது.