காரைதீவு நிருபர் சகா.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொலிஸ் நிலையப்ப பொறுப்பதிகாரியாக சுரந்த ஜயலத் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சமுகத்திற்கு நன்மை பயக்கும் செயற்றிட்டத்திற்காக உடனடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தை தூய்மையாக சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற முன்னோக்குத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
அதன் ஆரம்பக்கட்டமாக அண்மையில் (8) காரைதீவு பிரதேசசபையுடன் இணைந்து பிரதான வீதிகள் உள்வீதிகளை சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யும் பணியிலீடுபட்டனார்.
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் பொலிசார் ஊழியர்கள் இணைந்துகொண்ட இச் சுத்தமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் பிரதானவீதியின் இருமருங்கிலுமிருந்த கழிவுகள் குப்பைகள் பூரணமாகச் சுத்தமாக்கப்பட்டது.
அங்கு தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்:
புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் சமுகம் சார்ந்த இத்திட்டத்தை நாம் வரவேற்கிறோம். மேலும் பிரதான வீதியிலுள்ள கடைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிலையத்தினர் தமது குப்பைகளை உரியமுறையில் களஞ்சியப்படுத்தி எமது கழிவகற்றும்பிரிவினரிடம் ஒப்படைக்கவேண்டும். இன்றேல் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றர்.
புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயலத் கூறுகையில்:
எமது சம்மாந்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட காரைதீவில் இச்செயற்றிட்டத்தை முதன்முதலில்ஆரம்பித்துள்ளோம். தவிசாளர் பூரண ஒத்துழைப்பைவழங்கினார்.ஆனால் இருவரைத்தவிர பல உறுப்பினர்களை இங்குகாணவில்லை.அவர்கள் மக்கள் சேவகர்கள். கட்டாயம் இப்படியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். இதுதான் மக்கள்பணி வெறுமனே அமர்வுகளுக்கு மட்டுமவந்து கொடுப்பனவைப் பெறுவதுமட்டுமல்ல என்றார்.