பேருவளை முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கட மையாற்றிய சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியர் பஷீர் முஹம்மத் முஸ்தபா பேருவளை சீனன்கோட் டையில் 01.01.1990 ஆம் ஆண்டு தனது வைத்திய சேவையை ஆரம்பித்தார். அதன் 30 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பேரு வளை நியூஸ் குழுமத்தினால் அவரைப் பாராட்டி கௌரவிக்கும் விழா கடந்த வெள்ளிக்கிழமை சீனனகோட்டை அல் ரமைஸரா தேசிய பாடசாலை எஸ்.எம்.ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
சீனன்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் ஏ.எச்.எம் முக்தார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஆன்மிக அரசியல் மற்றும் பல்வேறு சமூகத்துறை சார்ந்த பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சுமார் 30 வருடங்களுக்கு முன் டாக்டர் பஷீர் முஹம்மத் முஸ்தபா பேருவளையிலுள்ள அவரது நண்பர் முஹம்மத் ஹலிம் என்பவரைச் சந்திக்க வந்துள்ளார். அதன் போதே ஹைலிமும் அவரது சக நண்பர்களும் இப்பகுதியில் வைத்தியர் ஒருவரின் சேவை குறித்துக் குறிப்பிட்டு அவரை இங்கு வந்து பணியாற்றும்படி கேட்டுள்ளனர். அதனை ஏற்றே 1989 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வைத்தியர் முஸ்தபா பேருவளை வந்துள்ளார்.
மர்ஹூம் அலிவபா ஹாஜியார் என்பவரே டாக்டருக்கான வீடு மற்றும் வைத்தியசிகிச்சை நிலைய வசதிகளையும் இலவசமாக வழங்கி யுள்ளார்.
அதன் விளைவாக 1990 ஜனவரி முதலாம் திகதி. இங்கு சேவையை ஆரம்பித்துள்ளார். அப்போது டாக்டர் முஸ்தபா காலி, கராபிட்டிய அரச வைத்தியசாலையில் கடமை புரிந்த தோடு அங்கிருந்து மாலை வேளை இங்கு வந்து பிரத்தியேக பணியில் ஈடுபட்டுள்ளார்.
பேருவளைப் பிரதேச சுகாதார வைத்தியதிகாரியாக 6 வருடங்கள் கடமையாற்றியதோடு இடைவிட்டு பின்னர் 2 வருடங்கள் மீண்டும் அப்பணியில் அமர்த்தப் பட்டு 8 வருடங்கள் சேவையாற்றி யுள்ளார்.
இக்காலப்பகுதியில் சுகாதார அதிகாரிகள், தாய், சேய் மருத்துவத் தாதிகள் என்போர் இவர் பொறுப்பில் இருந்ததால் இவர்களுடன் இணைந்து பேருவளைப் பகுதியின் சுகாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புச் செய்துள்ளார்.
கர்ப்பிணிகள், குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.
சுற்றாடல் பேணுவதிலும், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பர வாதிருப்பதிலும் விழிப்பூட்டும் வேலைத்திட்டங்கள் பலவும் இவரால் வழிநடத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் டெங்கு தாக்கம் குறைவான பகுதியாக பேரு வளைப் பிரதேசம் விளங்குவதற்கு இவரது பங்களிப்பும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
காலியிலிருந்து நாகொட வைத்தியசாலைக்கும் இடமாற்றம் பெற்று சுமார் 5 வருடங்கள் அங்கும் பணியாற்றியுள்ளார் அப்போது பேருவளைக்கு சமீபமாக வந்ததால் இப்ப குதியில் மேலும் இவரது பணிகள் துரிதமாகியுள்ளன.
இவர் கடமையாற்றிய பகுதிகளில் எல்லாம் தமிழ் மொழி பேசுவோர் பெரும்பாலும் இவரையே நாடி பணிகளைப் பெற்றுள்ளனர்.அவர்களுக்கும் இவரும் கூடிய பங்களிப்புக்களை வழங்கி வந்துள்ளார்.
அப்போது இவரது பகுதியைச் (சம்மாந்துறை) சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம் மொஹிதீன் இவரை அங்கு வந்து பணியாற்றுமாறு அழைத்தபோதிலும் பேருவளை மக்கள் மீது இவருக்கிருந்த பற்று காரணமாக அவ்வழைப்பையும் ஏற்காது இங்கு தன் பணியைத் தொடர்ந்துள்ளார்.
கொடை வள்ளல் மர்ஹூம் எம். ஐ.எம்.நளீம் ஹாஜியார் வழங்கிய ஒத்துழைப்பும் அவரது அன்பான அரவணைப்புமே இங்கு தொடர்ந்திருக்கத் தூண்டியதாக டாக்டர் பஷீர் முஸ்தபா கூறுகிறார்.
கொடை வள்ளல் மர்ஹூம் எம். ஐ.எம்.நளீம் ஹாஜியார் வழங்கிய ஒத்துழைப்பும் அவரது அன்பான அரவணைப்புமே இங்கு தொடர்ந்திருக்கத் தூண்டியதாக டாக்டர் பஷீர் முஸ்தபா கூறுகிறார்.
நளிம் ஹாஜியாரால் வழிநடத்தப்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் இலவச வகுப்பில் கற்ற நன்றிக் கடனும் டாக்டர் முஸ்தபாவுக்கு இங்கிருக்க ஒரு காரணம் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
இவர் புலமைப் பரிசில் பெற்று தாய்லாந்து நாட்டுக்குச் சென்று தன் திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார். மேலும் இந்தியா, சீனா, பெங்கொக், வியட்நாம், அஸர்பைஜான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று தன் துறைசார்ந்த தேர்ச்சிகள், அனுபவங்களையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்தும் இப்பகுதியிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் தன் பணிகளைத் தொடர்ந்து வழி நடத்துவதாக இலட்சியம் பூண்டுள்ளார்.
நன்றி - பீ.எம். முக்தார் (பேருவளை)