சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் 08 கோடி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு.
சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலத்தில் ஐக்கிய அமெரிக்க மனிதாபிமான உதவித் திட்டத்தின் இந்து பசுபிக் கொமான்ட் கட்டளைப் பீடத்தின் 08 கோடி நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத் தொகுயினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (20) பாடசாலை அதிபர் ஏ.ஏ. அமீர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.