Ads Area

பிராந்தியத்தின் மிகுந்த அவதானத்திற்குரிய வைத்தியசாலையாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை காணப்படுகிறது.

தகவல் - Dr. Ziyad

எமது பிராந்தியத்தின் மிகுந்த அவதானத்திற்குரிய வைத்தியசாலையாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை காணப்படுகிறது எந்தவித பேதமும் இல்லாது வைத்தியசாலைக்கான அபிவிருத்திகள் நடைபெறும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஷாத் மற்றும்  வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு ஆகியோரின் அழைப்பின் பேரில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பிராந்தியத்தின் மிகுந்த அவதானத்திற்குரிய வைத்தியசாலையாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை காணப்படுகிறது என்பதையும் எந்தவொரு விடயமும் தேவை அடிப்படையிலும் சேவை அடிப்படையிலும் பிராந்திய பணிமனை அர்ப்பணிப்புடன் வளங்களை வழங்கும் என்றும் சேவை விஸ்தரிப்பு செய்யப்படும் என்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எனது நீண்ட கால நண்பன் டாக்டர் ஆசாத் அவர்களுக்கும் இந்த வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் முன்னிலையில் அவர்களைப் பாராட்டி உறுதிமொழி அளிக்கிறேன். 

வார்த்தைகளுடன் மட்டும் நின்று விடாமல் செயலிலும் எமது அதிரடிகள் தொடரும் விரைவில் இன்னுமொரு சேவை விஸ்தரிப்புடன் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இவ் விஜயத்தின் போது வைத்தியசாலைக்கான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைத்ததோடு, சிற்றுண்டி சாலை ஒன்றையும் வைத்திய கலாநிதி.ஜீ.சுகுணன் அவர்கள் திறந்து வைத்தார்கள். 


இந் நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் டாக்டர் ஆஷாத், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் மாஹிர், உயிரியல் வைத்திய எந்திரி ரவிச்சந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் ஷாபி பிராந்திய கணக்காளர் பாரிஸ் மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe