பாறுாக் ஷிஹான்.
ஈஸ்டர் தாக்குதல்; கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை, இம்மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.