Ads Area

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முஸ்லிம்களும்-கிரிஸ்தவர்களும் மழை வேண்டிப் பிரார்த்தனை.

சம்மாந்துறை அன்சார்.
செய்தி மூலம் - dailymail.co.uk

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்பட பல்வேறு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்துவரும் காட்டுத்தீயால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 1 கோடியே 20 லட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், ஆயிரத்து 400 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 48 கோடி விலங்கினங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந் நிலையில் அவுஸ்ரேலியாவில் வாழும் முஸ்லிம் காட்டுத்தீயினைக் கட்டுப்படுத்த மழை வேண்டி தொழுகையிலும், பிரார்த்தனையிலும் நேற்று ஈடுபட்டிருந்தனர் முஸ்லிம்களோடு சேர்ந்து அவுஸ்ரேலிய கிரிஸ்தவர்களும் ஒன்றினைந்து மழை வேண்டிப் பிரார்த்தனைகளில், வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தற்போது அவுஸ்ரேலியாவில் மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe