கல்முனை பிரதேச செயலகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான கடமையை ஆரம்பிக்கும் வைபவமானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலகத்தின் முன்றலில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது சகல உத்தியோகத்தர்களும் கடமையை ஆரம்பித்திருந்ததுடன், அரசாங்க சேவை சத்திய பிரமாணமும் செய்யப்பட்டுள்ளது. இதில் நிர்வாக உத்தியோகத்தர் M.A.M.N.மனாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் K.ராஜதுறை, கணக்காளர் Y.L.ஹபீபுல்லாஹ், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A.C.A.நஜீம், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் M.M.பதுறுத்தீன், மாவட்ட மேலதிக பதிவாளர் M.T.M.கலீல் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.