Ads Area

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் உட்பட 29பேர் காத்தான்குடியில் கைது.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் உட்பட 29பேர் காத்தான்குடியில் கைது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது 29 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (18) சனிக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான 26 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டுவந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 2,690 மில்லிகிராம் கஞ்சாவுடன் 3 பேரும் 180 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரும் சட்டவிரோதமான முறையில் வாகனம் செலுத்திய 20 பேருமாக 29 பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் உத்தரவின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். ஜயரட்ணவின் வழிகாட்டலில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரீ.எல். ஜவ்பர்கான் - தினகரன்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe