யானைத் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த வருடம் 118 பேர் மரணம்.
யானை மற்றும் மனிதர்களுக்கிடையிலான தாக்குதலினால் கடந்த 2019ம் வருடத்தினுள் 386 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 118 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் வாய் வெடி , மின்சாரப் பாய்ச்சல் மற்றும் புகையிரதங்களுடன் மோதியதனாலும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளன. சில மனிதர்கள் யானைகளுக்கு நஞ்சு வைத்தும் கொலை செய்துள்ளதாகவும் மதிப்பீட்டு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் அனுராதபுரம் வனஜீவராசிகள் வலயத்தினுள் மாத்திரம் 56யானைகள் கடந்த ஆண்டில் மனிதர்களின் செயற்பாட்டினால் உயிரிழந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் 28 மனித உயிர்களும் பலியாகியுள்ளளன.
இப்பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வுகாணும் நோக்கில் தற்போதய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.