Ads Area

தங்கம் வென்ற லீடர் அஷ்ரப் வித்தியாலய மாணவர்களுக்கு ஊர் கூடி வரவேற்பு !!



(நூருல் ஹுதா உமர்)

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில், அகில இலங்கை மட்டத்தில் இரு தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 18 மற்றும் 19ம் திகதிகளில் நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் 72 பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற  விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களே இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். 


பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.ஜி. அஸ்ஹர் மற்றும்  ஏ.என்.எம். ஆபாக், ஏ.எம்.இஸட்.இஸ்றத் ஆகிய பயிற்றுவிப்பாளர்கள் உட்பட ஆசிரியைகளான திருமதி. லரீபா பாறுக், திருமதி. சுஹைனா பேகம் இஸ்திகார் நெறிப்படுத்தலில் இம்மாணவர்கள் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கம் வென்று பாடசாலைக்கு திரும்பிய அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வெற்றி வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று  காலை நடைபெற்றது.

இவ்வரவேற்பு நிகழ்வில் பிரதேச பாடசாலை அதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்தனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe