கத்தார் போக்குவரத்துத் துறையினர் போக்குவரத்து குற்றங்களை கண்காணிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் குறிப்பிட்ட இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிக்னல்கள் மற்றும் வேக கட்டுப்பாட்டு கெமராக்கள் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் வாகன ஓட்டுநர்கள், இது இல்லாத இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறி செயற்படுவது கண்டறியப்பட்டது. இது போன்று ஆங்காங்கு நடைபெறகின்ற போக்குவரத்து மீறல்களை கண்டறியவே மொபைல் கெமராக்கள் என்ற நடைமுறையை கத்தார் போக்குவரத்துத்துறை அறிமுகம் செய்தது. இது அறிமுகம் செய்யப்பட்டு இற்றைக்கு ஒன்றறை வருடங்களுக்கு மேலாகின்றது.
இது அறிமுகம் செய்யப்பட்ட போது கத்தாரில் பிரதான வீதிகளில் 4 இடங்களில் மட்டுமே நிறுவப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் தற்போது பெரும்பாலான பாதைகள் நிர்மானம் பெருமளவில் நிறைவடைந்துள்ள நிலையில் மொபைல் கெமராக்கள் எண்ணிக்கையை தற்போது 22 ஆக அதிகரிக்கப்பட்டு, போக்குவரத்து குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.
கத்தாரில் வாகன ஓட்டுநர்களாக பணிபுரியும் உறவுகள் மொபைல் கெமராக்கள் விடயத்தில் மிகவும் அவதானமாக செய்படுமாறு உண்மையின் பக்கம் மற்றும் கத்தார் தமிழ் முகநூல் பக்கம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். போக்குவரத்து விதிகளை சரிவர பின்பற்றாதவர்கள் அநியாகமாக அபராதங்களை செலுத்த வேண்டி ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்றைய தினம் மொபைல் கெமராக்கள் வைக்கப்பட்டுள்ள 22 இடங்கள்.