நூருல் ஹுதா உமர்
ஒக்ஸ்போர்ட் பாலர் பாடசாலை விடுகை விழாவும் 24 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நேற்று (19) காலை சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் பாலர் பாடசாலை பணிப்பாளர் எஸ்.ஜமால்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை அபிவிருத்தி பணிமனை அம்பாரை மாவட்ட அலுவலக இணைப்பாளர் மௌலவி எ.எம்.அனீஸ், சம்பத் வங்கி கல்முனை கிளை உதவி முகாமையாளர் எம்.எச்.முஹம்மட் பாரி, அல்- மீசான் பௌண்டசன் தவிசாளர் அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர், பாத்திமத்துல் சஹரா கல்லூரி முதல்வர் மௌலவி சபா முஹம்மத், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.முஹம்மது முபாரக், சாய்ந்தமருது பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எ. எம். ஆயிசா, உட்பட பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.