Ads Area

சம்மாந்துறை வீரத்திடல் அல்-ஹிதாயா பாடசாலை மாணவர்கள் மரணித்த சக நண்பிக்காக செய்த உள்ளம் பூரிக்கும் செயல்.

தகவல் - பைசத் அஹமத்.


சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சது/வீரத்திடல் அல் ஹிதாயா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம்-07 மாணவர்கள் தமது காலம்சென்ற சக நண்பி AW. ஹிக்மத் ஹனாபாவின் ஞாபகார்த்தமாக அவர் அடக்கப்பட்ட பள்ளிவாசலில் தாங்கள் பாடசாலை இடைவேளையில் சாப்பிடுவதற்காக கொண்டுசெல்லும் ஒரு நாளைக்கான பணத்தினை சேகரித்து மரங்களை கொள்வனவு செய்து நட்டார்கள்.

இவர்களின் முன்மாதிரியை கண்ட மரக்கன்றுகளின் உரிமையாளர் அப் பணத்தினை வாங்க மறுத்து எனது சார்பாக இந்த மரங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னபோதும் "இல்லை இம் மரங்களுக்கான விலை அதிகமாக இருக்கும் எனினும் எங்களது சேமிப்பு இவ்வளவுதான் இருக்கின்றது மிகுதியை உங்கள் பங்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னதை கேள்வியுற்றதும் உள்ளம் பூரிப்படைந்தது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe