Ads Area

ஒட்டகங்கள் அதிக நீரை அருந்துவதாக அவுஸ்திரேலியாவில் 10,000 க்கு மேற்­பட்ட ஒட்­ட­கங்­களைக் சுட்டுக் கொல்ல நட­வ­டி­க்கை.

செய்தி மூலம் - https://www.indiatimes.com

அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிலவும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக காட்டுத் தீ வேக­மாகப் பரவி வரு­கின்ற நிலையில் முழு நாடுமே திண்­டாட்­டத்தை எதிர்­கொண்­டுள்ளது.

இந்­நி­லையில்  அந்­நாட்­டி­லுள்ள ஒட்­ட­கங்கள் வரட்­சியால் பாதிக்கப்­பட்ட பிராந்­தி­யங்­களில் அதி­க­ளவு நீரை அருந்­து­வதைத் தடுத்து நிறுத்த அங்­குள்ள 10,000 க்கு மேற்­பட்ட ஒட்­ட­கங்­களைக் கொல்லும் நட­வ­டி­க்கை இன்று புதன்­கி­ழமை முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இதற்­காக உலங்­கு­வா­னூர்­தி­களில்  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக  துப்­பாக்கிச் சூட்டை நடத்­து­ப­வர்களை அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஒட்டகங்களைக் கொல்லும் இந்த நடவ டிக்கை சுமார் 5 தினங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe