Aumsa Media
இலங்கையின் 72வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு (Spade to Shade). “பசுமையான எதிர்காலத்திற்காய் கைகோர்ப்போம்” எனும் தொணிப் பொருளின் கீழ் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மரநடுகை செயற்திட்டம் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பு அல்ஹிதாயா வித்தியாலயத்தில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பின் தலைவர் அஹமத் ஷாதிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தலைமை அதிதியாக தேசிய சூறா சபை தலைவர் திருபீ.எம்தாரிக் மஹ்மூத் அவர்களும், கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் திரு என்.எம்அமீன் அவர்களும், கொழும்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஆர்பிரேமதிலக அவர்களும்,
மேலும் அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி திருமதி பரீனாருஸைக், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உபதலைவி திருமதி புர்கான் பீ இப்திகார், திருமதி ரஸ்னி ராசிக், அல் ஹிதாயா பாடசாலையின் பிரதி அதிபர் இஸ்மி, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் திரு எம்.வை.எம்அஸ்லம், தேசிய ஷூராசபை அங்கத்தவர் சகோதரர் அன்வர் சாதாத் மற்றும் மத தலைவர்களான கௌரவ ஸ்ரீசீவலிபிக்கு, உமர் அஹமட் மௌலவி மற்றும் ஆனந்த சுவாமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்...
மேலும் AUMSA வினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடளாவிய ரீதியிலான மரநடுகை செயற்திட்டத்தில் பல்கலைக்கழகங்களின் 25 முஸ்லிம் மஜ்லிஸ்கள், 15 இளங் கலை பட்டதாரி அமைப்புகள், ஏனைய அமைப்புக்கள் மற்றும் நாட்டின் சகல பிரஜைகளும் இச் செயற்றிட்டத்தில் தங்களின் பங்களிப்புகளை வழங்கினார்கள். இதன் மூலம் நாடு பூராகவும் 5000 இற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன.