Ads Area

பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்களை பணியில் அமர்த்துமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்களை பணியில் அமர்த்துமாறு கோரல்


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மான்புமிகு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதை அடுத்து  அனைத்து பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இச்சந்தர்ப்பத்தில் கடந்த 2019.05.07ம் திகதி அரச வர்த்தமாணியினால் பிரசுரிக்கப்பட்டு தேசிய கொள்கைகள் பொருளாதார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு நாடளாவிய ரீதியில் அனைவரிடமும் விண்ணப்பம் கோரப்பட்டு கடந்த 2019.06.24ம் திகதி அலரி மாளிகையில் 1ம் நேர்முகப்பரீட்சை இடம் பெற்றதுடன் 2ம் நேர்முகப்பரீட்சை 2019.08.25ம் திகதி அதே பிரதம காரியாலயத்தில் இடம்பெற்றது. 

இதன் போது எதிர்பார்த்த அளவு பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் தகமைகள் பெறாத காரணத்தினால் மேலும் 3வது நேர்முகப்பரீட்சை 2019.09.13ம் திகதி அதே பிரதம காரியாலயத்தில் இடம்பெற்றது இதன் போது எதிர்பார்த்த படி தகமையுடையவர்கள் உள்வாங்கப்பட்டதால் கடந்த   16.09.2019ம் திகதி; தெரிவு செய்யப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் அனைவருக்கும் நியமனக்கடிதம்   கிடைக்கப்பெற்றது.

இவ்வாறு வழங்கப்பட்ட நியமனக்கடிதம் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட நியமனங்கள் எனக்கூறி கௌரவ. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய அவர்களினால் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தற்காலியமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

எனினும் தேர்தல் முடிந்ததன் பிற்பாடு கௌரவ. தேர்தல் ஆணையாளர் அவர்களினால் தற்காலியமாக  வழங்கப்பட்ட இடைநிறுத்தம் முற்றாக நீக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தும் இதுவரை காலமும் எங்களை பணிக்கு அமர்த்தாதது பயிலுனர் செயற்திட்ட உதவியாளராகிய எங்களுக்கு பெரும் மன உளைச்சலை உண்டுபன்னுகிறது. தேர்தல் முடிந்த தினத்திலிருந்து இன்று வரை மாவட்ட செயலகத்திற்கும் ஜனாதிபதி காரியாலத்திற்கும் மற்றும் பிரதமர் கயயரியாலயத்திற்கும்  சென்று இது தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்தித்து எங்களை  பணிக்கு அமர்த்தும் விடையம் சம்மந்தமாக அவர்களுடன் பேசியும்  ஒவ்வெரு முறையும் ஏமாற்றத்தினையே சந்தித்து வருகின்றோம்.

அதே போன்று 5 ம் மற்றும் 6 ம் திகதிகளில் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி ஒன்றை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் மேற்கொண்ட போது இரண்டு நாட்களிலும் தனி தனியாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பாக 05 நபர்கள் ஜனாதிபதி செயலகத்தில் அனுப்பட்டனர் இதன் போது இறுதியில் உங்களுக்கு 2 மணித்தியாலயங்களுக்குள் உங்களுக்கு கடிதம் மூலம் தீர்வு கிடைக்கும் என வாக்குறுதி அளித்தார்கள் அதை எதிர்பார்த்த நிலையில் காத்துக் கொண்டிருந்த பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

கௌரவத்துக்கும் மதிப்புக்குரிய அதிமேதகு ஜனாதிபதி அவர்களே இப்பதவியினை பெறுவதற்கு உங்களுடைய உதவியினை தேடி வந்துள்ளோம் முழு இலங்கை சார்பாக 6800 பேரும் இப்பதவிக்கு தெரிவாகியுள்ளோம். நாங்கள் அனைவரும் இப்பதவியினை பெறுவதற்காக தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவற்றை நிறுத்திவிட்டு இப்பதவியினை தேர்ந்தெடுததுள்ளோம் இப்பதவி 6800 குடும்பங்களின் எதிர்கால வாழ்க்கையில் தங்கியுள்;ளது.

கௌரவத்துக்குரிய அதிமேதகு ஜனாதிபதி அவர்களே  எங்களது எதிர்கால வாழ்க்கையின் நலன் கருதி நிச்சயமாக இது விடயத்தில் தாங்கள் ஒரு சிறந்த முடிவினை பெற்றுத்தருவீர்கள்  என எதிர்பார்க்கின்றோம் மேலும் தங்களின் எதிர்கால அரசியல் பயணத்தின் தாங்களும் பங்காளராக செயற்படுவோம் என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

இது தொடர்பான முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கள்ளட்டளது.

இவ்வண்ணம்.
பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe