நூருல் ஹுதா உமர்.
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான சுதந்திர தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) கல்முனை நகர மத்தி சுற்றுவட்ட சந்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்காக சுதந்திர சதுக்க மேடை புனரமைப்பு செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டிருந்ததுடன் கல்முனை மாநகர சபை வளாகம் முதல் கல்முனை மாநகரம் முழுவதும் தேசிய கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.